×

பூந்தமல்லி அருகே புறவழிச்சாலையில் ஆட்டோ ரேஸில் ஈடுபட்ட மெக்கானிக் பலி

பூந்தமல்லி, நவ.20:  சென்னை வில்லிவாக்கம், திருவேங்கடம் தெருவை சேர்ந்தவர் பிரபாகர் (30), ஆட்டோ மெக்கானிக்கான இவர், கடந்த வாரம் தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் போரூர் அருகே மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது விபத்தில் சிக்கியதாகக் கூறி அவரது நண்பர்கள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசாரின் தீவிர விசாரணையில் பிரபாகர் மொபட்டில் சென்றபோது விபத்தில் இறக்கவில்லை.  ஆட்டோ ரேஸில் ஈடுபட்டபோது கண்டெய்னர் மீது மோதியதால்  பிரபாகர் இறந்து போனது தெரியவந்தது.

இதையடுத்து, பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையலிான தனிப்படை  போலீசார், ரேஸ் நடந்தபோது எடுக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் வாகனங்களின் நம்பர்களை வைத்து ஆட்டோ ரேஸில் ஈடுபட்ட குன்றத்தூர்  பூந்தண்டலத்தைச் சேர்ந்த மதர் என்ற மதார்ஷா (30), வெங்கடேசன் (32), ஜாபர்கான்பேட்டையை சேர்ந்த உதயா (28), கிண்டியை சேர்ந்த தனசேகர் (26), அயப்பாக்கத்தை சேர்ந்த மகேஸ்வரன் (30), கே.கே. நகரைச் சேர்ந்த கார்த்திக் (30), ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிமிருந்து 3 ஆட்டோக்கள், ஒரு கார், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags : mechanic ,auto race ,Poonthamalli ,sidewalk ,
× RELATED மெக்கானிக் தூக்கிட்டு தற்கொலை