×

ஸ்ரீபெரும்புதூர் அருகே குண்ணம் கிராமத்தில் தூர்வாராமல் புதர்மண்டி கிடக்கும் கருமாதி குளம்

ஸ்ரீபெரும்புதூர், நவ. 20: ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் குண்ணம் ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியில் காலனியில் மட்டும் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், 100க்கும் மேற்பட்ட அதிகமான கால்நடைகள் வளர்த்து வருகின்றனர். இப்பகுதியில் கருமாதி குளம் உள்ளது. இங்குள்ள கருமாதி குளம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை மக்களின் பயன்பாட்டுக்கும், கால்நடைகள் குடிநீர் தேவைக்காகவும் பயன்பட்டது. மேலும், காலனி பகுதியை சேர்ந்த யாரேனும் இறந்தால், இந்த குளக்கரையின் மீது ஈமச்சடங்கு நடத்தப்படுகிறது. ஈமச்சடங்கு முடிந்தவுடன் பொதுமக்கள் இந்த குளத்தில் குளிக்கின்றனர்.

கடந்த 5 ஆண்டுகளாக பராமரிக்காமல் பாழடைந்து உள்ள இந்த குளத்தின் கரையை சுற்றி முட்செடிகள் காடுபோல் வளர்ந்து கிடக்கிறது. மேலும், படித்துரைகள் இடிந்து விழுந்துள்ளன. இதனால் பொதுமக்கள் இந்த குளத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே குண்ணம் காலனி கருமாதி குளத்தை தூர்வாரி சீரமைத்து தரவேண்டும் என கடந்த 5 ஆண்டுகளாக, ெபாதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை மனுக்கள் கொடுத்து வருகின்றனர். ஆனால் அதிகாரிகள், அதனை கண்டும் காணாமல் உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

Tags : village ,Karumathi Tank ,Sriperumbudur ,Kunnam ,
× RELATED கிராமத்து கோழி ரசம்