×

திருவொற்றியூர் விம்கோ நகரில் ஓடும் ரயிலில் கத்திமுனையில் பயணிகளிடம் கொள்ளை முயற்சி : வடமாநில ஆசாமிகளுக்கு வலை

சென்னை: திருவொற்றியூர் விம்கோ நகரில் ஓடும் ரயிலில் கத்திமுனையில் பயணிகளிடம் கொள்ளையடிக்க முயன்ற வடமாநில ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை சென்ட்ரலில் இருந்து ேநற்று மாலை எக்ஸ்பிரஸ் ரயில் ஜெய்ப்பூர் நோக்கி புறப்பட்டது. அந்த ரயிலில் வடமாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் 4 பேர், பயணிகளிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போன் ஆகியவற்றை பறிக்க முயன்றனர். இதை பார்த்த சக பயணிகள் ஒன்று திரண்டு கொள்ளையர்களை தாக்க முயன்றனர்.

உடனே, கத்தியை காட்டி மிரட்டி திருவொற்றியூர் அடுத்த விம்கோ நகர் ரயில் நிலையத்தில் ரயில் சென்றபோது அபாய சங்கிலியை இழுத்து கொள்ளையர்கள் ரயிலில் இருந்து கீேழ குதித்தனர். மேலும், சில பயணிகளும் கொள்ளையர்களை துரத்தி சென்றபோது கத்தியை காட்டி மிரட்டியபடியே கொள்ளையர்கள்  தப்பி விட்டனர். இதுகுறித்து பயணிகள் அவசர உதவி எண் 100க்கு போன் செய்தனர். தகவல் அறிந்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு ெசன்று ரயிலில் இருந்த ஊழியர்கள் மற்றும் பயணிகளிடம் விசாரணை நடத்தினர். பின்னர் 1 மணி நேரத்திற்கு பிறகு அந்த ரயில் அங்கிருந்து சென்றது. மேலும், தப்பிேயாடிய வடமாநில கொள்ளையர்களை ரயில்வே போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். இந்த சம்பவத்தால் விம்கோ நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Thiruvottiyur ,Kathimunai ,
× RELATED கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள...