கார் விபத்தில் உயிரிழந்த வாலிபர் குடும்பத்துக்கு 40.47 லட்சம் இழப்பீடு

சென்னை: சென்னை நொளம்பூரை சேர்ந்தவர் சின்னக்கண்ணு (28). திருமணமாகி மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்தார். கடந்த 2016ம் ஆண்டு, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், தனது பைக்கில் சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அதிவேகமாகவும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையிலும் கார் ஒன்று வந்துள்ளது. இந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஓடி, சாலை தடுப்பில் இடித்து, பைக் மீது மோதியது. இதில், சின்னக்கண்ணு தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்நிலையில், கணவரின் இறப்பிற்கு இழப்பீடு வழங்கக் கோரி அவரது மனைவி பானுப்பிரியா, அவரது இரண்டு மகன்கள் ஆகியோர், சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கு நீதிபதி எஸ்.உமாமகேஷ்வரி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் கணவர் உயிரிழந்ததற்கு அதிவேகமாக வந்த கார் தான் காரணம் என்று உடற்கூறு ஆய்வு சான்றிதழ் மற்றும் சாட்சியங்களை வைத்து பார்க்கும் போது தெரியவந்துள்ளது. எனவே, மனுதாரர் மற்றும் மகன்களுக்கு இழப்பீடாக, 40.47 லட்சத்தை இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Related Stories: