×

செல்போன் கம்பெனிக்கு 25 ஆயிரம் அபராதம்

சென்னை:  ராயப்பேட்டையை சேர்ந்தவர் ஆனந்த் குமார். இவர், கடந்த 21.2.2017 அன்று தி.நகரில் உள்ள ஷோரூமில் 15,200 கொடுத்து புதிய செல்போன் வாங்கியுள்ளார். ஆனால், வாங்கிய சில நாட்களிலேயே செல்போன் பழுதானது. இதனால், ஆனந்த் குமார், நுங்கம்பாக்கத்தில் உள்ள செல்போன் சர்வீஸ் சென்டரில், செல்போனை பழுது பார்க்க கொடுத்துள்ளார். அவர்களும் பழுது பார்த்து கொடுத்துள்ளனர். ஆனால், மீண்டும் செல்போன் பழுதானது.

இதுபற்றி செல்போன் நிறுவனத்துக்கு பலமுறை புகார் அளித்தார். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதைதொடர்ந்து சென்னை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி மோனி, உறுப்பினர் பாஸ்கர் குமரவேல் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, செல்போன் நிறுவனத்தால் மனுதாரர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனால் செல்போன் நிறுவனம் மற்றும் சர்வீஸ் சென்டர் மனுதாரருக்கு செல்போன் விலை மற்றும் சர்வீஸ் செய்த தொகை என 19,200 மற்றும் மன உளைச்சல் வழக்கு செலவு என 25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி உத்தரவிட்டார்.

Tags : cell phone company ,
× RELATED சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா அபராத...