×

மல்லூர் அருகே கல்குவாரி பாறையில் வெடி வைத்தவர்கள் மீது தாக்குதல்

சேலம், நவ.20: சேலம் மல்லூர் அருகே உள்ள கல்குவாரியில் பாறைகளுக்கு வெடிவைத்த இருவரை அதே பகுதியை சேர்ந்தவர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவடடம் பனமரத்துபட்டி பகுதியை சேர்ந்தவர்கள் ரவி (30), சக்திவேல் (25). இவர்கள் இருவரும் கூலி தொழில் செய்து வருகின்றனர். இருவரும் மல்லூர் அருகே உள்ள கல்குவாரியில் நேற்று காலை வேலைக்கு சென்றுள்ளனர். அந்த பகுதியில் சிலர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த  கல்குவாரி உரிமையாளருக்கும், அதே பகுதியில் வசிப்பவர்களுக்கும் கடந்த சில நாட்களாக பிரச்னை இருந்துள்ளது. இந்த நிலையில் கல்குவாரியில் நேற்று ரவியும், சக்திவேலும் பாறைகளுக்கு ெவடிக்க வைக்கும் போது, அதே பகுதியை சேர்ந்த முருகேசன், செல்வராஜ் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதை ெபாருட்படுத்தாமல் இருவரும் வெடிவைத்து பாறைகளை உடைத்துள்ளனர். இதில் பாறை துண்டுகள் வீடு அமைந்துள்ள பகுதியில் சிதறியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து முருகேசன், செல்வராஜ் ஆகியோர் கோபமடைந்து இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் காயமடைந்த இருவரும், அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : gunmen ,Kalquari rock ,Mallur ,
× RELATED திப்புராயபேட்டையில் ஆயுதங்களுடன்...