×

இடைப்பாடி பகுதியில் விதை விற்பனை நிலையங்களில் அதிகாரி ஆய்வு

இடைப்பாடி, நவ.20:  இடைப்பாடி பகுதியில் அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில், அதிகாரி அதிரடி ஆய்வு பணியில் ஈடுபட்டார்.இடைப்பாடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் சேலம் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் சண்முகம் திடீர் ஆய்வு செய்தார். இடைப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது பரவலாக மழை பெய்துள்ளதால் விவசாயிகள் உழவு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு விதைப்புக்கு தேவையான தரமான விதைகள் அரசு அங்கீகாரம் பெற்ற விதை விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இதைத்தொடர்ந்து சேலம் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் சண்முகம் விதை விற்பனை நிலையங்களில் தரமான விதைகள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தார்.  அரசு விதை விற்பனை நிலையங்களான வேளாண்மை விரிவாக்க மையங்களில் இந்த ஆய்வு நடந்தது. இதில் உரங்களின் இருப்பு பட்டியல், கொள்முதல் பட்டியல், விதை மாதிரி ஆய்வறிக்கை, காலாவதி பதிவேடு, பதிவுச்சான்றுகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து விற்பனையாளர்களுக்கு தரமான விதைகளை விற்பனை செய்ய ஆலோசனை வழங்கப்பட்டது. ஆய்வின் போது விதை ஆய்வாளர் சம்பத்குமார் உடனிருந்தார்.

Tags : inspections ,seed stalls ,cesspool area ,
× RELATED அரியலூர், திருவாரூர், தருமபுரி உள்பட 6...