×

வீட்டு பூட்டை உடைத்து கொள்ளை

சேலம், நவ.20:  சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பாரதிநகரை சேர்ந்தவர் முகமது அப்துல்லா(41). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த 16ம் தேதி சொந்த வேலையாக குடும்பத்தோடு திருநெல்வேலிக்கு சென்றிருந்தார். நேற்றுமுன்தினம் வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த முகமது அப்துல்லா உள்ளே சென்று பார்த்த போது, வீட்டில் இருந்த 2 பவுன் நகை, ₹50 ஆயிரம் பணம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து அப்துல்லா சூரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED வேலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 2.5 கிலோ தங்கம் கொள்ளை