×

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் நூல் வெளியீட்டு விழாவில் திரண்ட நிர்வாகிகள், தொண்டர்களுக்கு நன்றி

சேலம், நவ.20: முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு, வீரபாண்டி ராஜா நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா வெளியிட்டுள்ள அறிக்கை:சேலம் மாவட்ட திமுக முன்னாள் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகத்தின் ‘‘திராவிட இயக்க வரலாற்றில் என் பயணம்’’ என்ற சுயசரிதை நூல் கடந்த 17ம் தேதி வெளியிடப்பட்டது. விழாவிற்கு தலைமை வகித்து நூலை வெளியிட்டதுடன், வீரபாண்டியாருக்கு புகழாரம் சூட்டிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, சேலம் மாவட்ட திமுக மற்றும் எனது குடும்பத்தினர் சார்பில் நன்றியை காணிக்கையாக்குகிறேன். மேலும், இந்த விழாவில் நேரடியாக பங்கேற்ற மற்றும் தொலைபேசி மூலமாக வாழ்த்து தெரிவித்த மாவட்ட கழக செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த காவல் துறையினருக்கு மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இனிவரும் காலங்களில் கட்சிக்கும், தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் உறுதுணையாய் இருந்து,  திமுக ஆட்சியமைக்க அனைவரும் பாடுபட வேண்டும்.

Tags : administrators ,Veerapandi Arumugam ,volunteers ,launching ceremony ,
× RELATED சேலத்தில் நாளை வீரபாண்டி ஆறுமுகம்...