×

பச்சமுத்து பார்மசி கல்லூரி சார்பில் மருந்தியல் வாரவிழா விழிப்புணர்வு பேரணி

தர்மபுரி, நவ.20: தர்மபுரி பச்சமுத்து பார்மசி கல்லூரி சார்பில், மருந்தியல் வார விழா விழிப்புணர்வு பேரணி நடந்தது. தர்மபுரி பச்சமுத்து காலேஜ் ஆப் பார்மசி கல்லூரி சார்பில், 58வது மருந்தியல் வார விழா நடந்தது. விழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகள் மருந்தாளுநர் துறையின் சிறப்பம்சத்தையும், மருந்து உட்கொள்ளும் முறையை பற்றியும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பேரணி நடந்தது. இப்பேரணிக்கு பச்சமுத்து கல்லூரி குழுமத்தின் தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார். துணை தலைவர் சங்கீத்குமார், பிரியா சங்கீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் முனைவர் பழனிவேல், மருந்தியல் துறையை பற்றி பேசினார். பேரணியை இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் மதியழகன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பேரணி தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி முன் தொடங்கி, நெசவாளர் காலனி, நான்கு ரோடு வழியாக உழவர் சந்தை வரை நடந்தது. பேரணியில் மாணவ, மாணவிகள் மருந்து துறையைப்பற்றியும், மருந்து உட்கொள்ளும் முறையை பற்றி விழிப்புணர்வு பலகைகள் கையில் ஏந்தியும், கோஷமிட்ட படி சென்றனர். இப்பேரணியில் கல்லூரி கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags : rally ,Bachhamuthu Pharmacy College ,
× RELATED கோவையில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற...