×

கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு, டேங்க் ஆபரேட்டர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்

தர்மபுரி, நவ.20: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும், கிராம பஞ்சாயத்து துப்புரவு மற்றும் டேங்க் ஆபரேட்டர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு வழங்கியுள்ளனர்.தமிழ்நாடு கிராம ஊராட்சி பணியாளர்கள் மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குபவர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர் நெல்லை ஆறுமுகம், உள்ளாட்சி பணியாளர் சங்க மாநில செயலாளர் கிருஷ்ணன், ஏஐடியூசி மாவட்ட பொது செயலாளர் மணி மற்றும் நிர்வாகிகள் ராஜமாணிக்கம், ராமச்சந்திரன், வைசாலி ஆகியோர் தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழியிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:திடக்கழிவு மேலாண்மையில் பணிபுரியும் குறைந்தபட்ச ஊதியத்தை அமல்படுத்த வேண்டும். உள்ளாட்சித்துறை காலிப் பணியிடங்களில் நிரந்தர பணியாளர்களைக் கொண்டு, நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். துப்புரவு பணியாளர்களுக்கு வாரவிடுமுறை, அரசு விடுமுறை முழுமையாக வழங்க வேண்டும். ஊராட்சி பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மேலும் தர்மபுரி மாவட்டத்தில் பணியாற்றும் டேங்க் ஆபரேட்டர்களுக்கு, அரசு ஆணைப்படி ஊதியம் மற்றும் பணி வரன்முறை படுத்த வேண்டும். மாவட்டத்தில் பணியாற்றும் பெரும்பாலான பணியாளர்களுக்கு அரசு விதிகளின்படி சிறப்பு காலமுறை ஊதியம் வழங்காமல் உள்ளது. எனவே சிறப்பு காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்து வழங்க வேண்டும். 7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tank Operators ,areas ,
× RELATED ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் மிளகாய் உலர் களம் அமைக்க கோரிக்கை