×

இந்திராகாந்தி பிறந்தநாள் விழா

அரூர், நவ.20:  அரூர் அருகே எச்.ஈச்சம்பாடியில் காங்கிரஸ் சார்பில், இந்திராகாந்தி பிறந்தநாள் விழா  கொண்டாடப்பட்டது. மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 102வது பிறந்த நாள் விழா, அரூர் அருகே  எச்.ஈச்சம்பாடியில் காங்கிரஸ் சார்பில் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி அரூர் மேற்கு வட்டார தலைவர் வஜ்ஜிரம் தலைமை வகித்து, இந்திரா காந்தியில் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் முருகன், காளிசுந்தரம், வெங்கடேசன், கமலேசன், விக்ரம், ஆறுமுகம், சண்முகம்,  மணி, ராஜி, முருகம்மாள், கஸ்தூரி, ெசல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Birthday Party ,Indira Gandhi ,
× RELATED இந்திரா காந்தி பிறந்த நாள் விழா