×

உலக கழிப்பறை தின விழா

பாலக்கோடு, நவ.20: பாலக்கோடு தேர்வுநிலைப் பேரூராட்சியில் உலக கழிப்பறை தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதை, செயல் அலுவலர் கோபால் கொடி அசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.பின்னர், செங்காளியம்மன் கோயில் அருகே பொது கழிப்பறையை தூய்மை செய்யும் பணியை நடந்தது.இதில், செயல் அலுவலர், துப்புரவு ஆய்வாளர் மற்றும் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர். மகளிர் சுய உதவி குழுவினருக்கு கழிப்பறை உபயோகம் குறித்து விழிப்புணர்வு பணி மேற்கொள்ளப்பட்டது. அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில், உலக கழிப்பறை தின உறுதிமொழி ஏற்பு நடந்தது. இதில், துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன், ஜெயஸ்ரீ, மாதேஷ், மாதேஷ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  
பென்னாகரம்: பென்னாகரம் தேர்வுநிலை பேரூராட்சியில், உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ஜீஜாபாய் தலைமையில், பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணி நாகமரை ரோடு, காவேரி ரோடு, போலீஸ் ஸ்டேஷன், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, தாசில்தார்  அலுவலகம்,  உள்ளிட்ட வழியாக மீண்டும், பள்ளியை சென்றடைந்தது. இப்பேரணியில் செயல் அலுவலர் கீதா, தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன், பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் பள்ளி ஆசிரியை, ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags : World Toilet Day Festival ,
× RELATED உதயநிதி ஸ்டாலின் கைது கண்டித்து மாவட்டம் முழுவதும் திமுகவினர் மறியல்