×

டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பேரணி

தர்மபுரி, நவ.20: தர்மபுரி மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில், டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. தர்மபுரி மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை, கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி சார்பில், டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பேரணி, ஏ.கொல்லஅள்ளி கிராமத்தில் நடந்தது. பேரணி தர்மபுரி எஸ்வி ரோடு, காந்தி சிலை அருகில் முடிந்தது. இந்த விழிப்புணர்வு பேரணியை மருத்துவர் அபினேஷ் தொடங்கி வைத்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மதியழகன், சுகாதார ஆய்வாளர் மனிரத்தினம், சண்முகம், ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி தாளாளர் கிருஷ்ணமூர்த்தி, ஆதிலட்சுமி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.  பயனற்ற பிளாஸ்டிக் பொருட்கள், டயர்கள், உரல்கள், ஒரே இடத்தில் தேங்கி இருக்கும் மழைநீர் ஆகியவற்றால் டெங்கு புழுக்கள் உருவாகும் முறையாகும். இதை தடுக்க நடவடிக்கை எடுக்க ேவண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில, பள்ளி மற்றும் பாரா மெடிக்கல் கல்லூரி மாணவர்கள் வீடுகள் தோறும் கள பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் விழிப்புணர்வில் ஈடுபட்டனர்.

Tags : Dengue Prevention Awareness Rally ,
× RELATED வடமங்கலம் கிராமத்தில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பேரணி