×

வடகிழக்கு பருவமழை தீவிரம் குழந்தைகளை நீர்நிலைகளின் அருகில் செல்ல அனுமதிக்காதீர்

கிருஷ்ணகிரி, நவ.20: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தொடர்ந்து வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் குழந்தைகளை நீர்நிலைகளின் அருகில் செல்ல அனுமதிக்க வேண்டாம் என கலெக்டர் பிரபாகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகள், குளங்கள், குட்டைகள், ஊரணிகள் தூர்வாரப்பட்டும், கரைகளை பலப்படுத்தியும், நீர்வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, ஏரி, குளங்கள் ஆழப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பெரும்பாலான நீர்நிலைகள் தண்ணீர் நிரம்பி உள்ளன. ஆகையால் பொதுமக்கள் தாங்கள் மற்றும் தங்களது குழந்தைகள், நீர்நிலைகளுக்கு அருகில் விளையாடவோ, நீர்நிலைகளில் குளிக்கவோ, படகு சவாரி செய்வதோ கூடாது. செல்பி எடுக்க முயற்சிக்க வேண்டாம் எனவும், உயிர் சேதத்திலிருந்து தங்களை காத்துக்கொள்ளுமாறும், எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன். மேலும், பொதுமக்கள் தங்களது புகார்களை, கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, தரைவழி தொலைபேசி எண். 04343-234444, வாட்ஸ் அப் எண் 6369700230 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

Tags : children ,water bodies ,
× RELATED புது வாழ்விற்கு வழியமைத்ததிரு(புது)நாள்