×

வினாடி வினா போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

போச்சம்பள்ளி, நவ.20: மத்தூர் ஒன்றிய அளவிலான வினாடி வினா போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர். மத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒன்றிய அளவில் வினாடி வினா போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ஒன்றியத்தில் உள்ள அரசுப்பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிக்கு ஆசிரியர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காளியப்பன் தலைமை வகித்தார். ஆசிரியர் சங்க நிர்வாகி சந்தோஷ் வரவேற்றார். ஜூனியர் பிரிவில் மலையாண்டஹள்ளி அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர். மத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 2ம் இடம் பெற்றனர்.  சீனியர் பிரிவில் வேலாவல்லி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் 2ம் இடம் பிடித்தனர். சூப்பர் சீனியர் போட்டியில் மத்தூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிரண்டு இடங்களை பிடித்தனர். வெற்றி பெற்றவர்களில் முதலிடம் பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர். வினாடி வினா போட்டிக்கு ஆசிரியர்கள் அசோக், ராஜா, பாரதிராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சரவணன் நன்றி கூறினார். மாவட்ட தலைவர் சர்ஜான் ஒருங்கிணைத்தார்.

Tags : Quiz Competition ,
× RELATED பெஸ்ட் சிபிஎஸ்இ பள்ளியில் வினாடி வினா போட்டி