×

முதியோர் இல்லத்தில் சேர விண்ணப்பிக்கலாம் முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு

கிருஷ்ணகிரி, நவ.20: சென்னையில் உள்ள நிம்மதி இல்லத்தில் சேர விரும்பும் முன்னாள் படைவீரர்கள், விதவைகள் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் பிரேமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முப்படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற முன்னாள் படைவீரர்கள் மற்றும் விதவையர்கள், போர் விதவைகள் நலச்சங்கத்தினால் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் செயல்பட்டு வரும் நிம்மதி இல்லம் என்ற முதியோர் இல்லத்தில் சேரலாம். இந்த இல்லம் வயது முதிர்ந்த நிலையில் ஆதரவற்ற முன்னாள் படைவீரர்கள், விதவையர்கள் ஆகியோருக்காக அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இதில் சேர விரும்பும் முன்னாள் படைவீரர்கள், விதவையர்கள் கிருஷ்ணகிரியில் உள்ள முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Veterans ,Elderly Home ,
× RELATED ராணுவ வீரர்கள் வாரிசுக்கு மருத்துவ...