×

உடுமலையில் சிலம்ப போட்டி

உடுமலை, நவ. 20:  உடுமலை ஜீவா சிலம்பம் அசோசியேசன் மற்றும் திருப்பூர் மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில், மண்டல அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கிடையே சிலம்பாட்ட போட்டி வாணி மஹாலில் நேற்று நடந்தது. இதில் மாவட்ட சிலம்பாட்ட கழக பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். ஜீவா சிலம்பம் அசோசியேசன் செயலாளர் நந்தகோபால் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட சிலம்பாட்ட கழக தலைவர் ரங்கசாமி, உடுமலை காவல் ஆய்வாளர் ஓம்பிரகாஷ், பல்லடம் காவல் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன், எஸ்.கே.பி. மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குநர் நல்லாசிரியர் அன்பரசு ஆகியோர் பங்கேற்றனர். தொடர்ந்து மாலையில் பரிசளிப்பு விழா நடந்தது.

Tags : Ulamalai Chilamba Competition ,
× RELATED டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு...