×

கஞ்சா, மது, புகையிலை விற்ற 45 பேர் கைது

திருப்பூர், நவ.20:  திருப்பூர் ஆண்டிபாளையம் நொய்யல் ஆற்றுப்பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக மத்திய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் எஸ்.ஐ. முத்துக்குமார் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த மதுரை சமயநல்லுார் பகுதியை ேசர்ந்த முருகன் (32), திருப்பூர் கருவம்பாளையம் ஈஸ்வரமூர்த்தி லே-அவுட் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (23) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா, ரூ.3 ஆயிரத்து 190 ரொக்க பணத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  அதேபோல் திருப்பூர் மாநகர் பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் உள்ள கடைகளில் போலீசார் ஆய்வு செய்தபோது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக 35 கடை உரிமையாளர்களை போலீசார் கைது செய்து 4 ஆயிரத்து 261 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.  திருப்பூர்-ஊத்துக்குளி ரோடு 2வது ரயில்வே கேட், கங்கா நகர், பழைய பஸ் ஸ்டாண்ட், மணியகாரம்பாளையம், வஞ்சிபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சட்டவிரோத மது விற்பனை செய்த குப்புசாமி(52), மணிவண்ணன்(24), ,சிவனப்பன்(43), இளையராஜா(27), அல்போன்ஷா(38), மகேஷ்குமார்(32), அப்பாத்துரை(22), ராஜா(28) ஆகிய 8 பேரை மதுவிலக்கு போலீசார் கைது செய்து 144 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED அமராவதி பூங்காவில் தென்னை மரங்கள், சிற்றுண்டிச்சாலை பொது ஏலம்