×

சைல்டுலைன் சார்பில் மனித சங்கலி விழிப்புணர்வு

திருப்பூர், நவ.20:  திருப்பூர் மாவட்ட முழுவதும் குழந்தை உரிமைகள் மற்றும் பாதுகாப்பினை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை மாதந்தோரும் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று உலக குழந்தைகள் மீதான தீங்கிழைத்தலுக்கு எதிரான தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பூர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சமூக கல்வி மற்றும் முன்னேற்ற மையம் (CSED), மரியாலயா மற்றும் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடைபெற்றது.  இந்நிகழ்வின் நோக்கவுரையாற்றிய சைல்டுலைன் மைய ஒருங்கிணைப்பாளர் கதிர்வேல் குழந்தை உரிமைகள், சமூகத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகள் மற்றும் சைல்டுலைன் நண்பர்கள் வாரம் குறித்து பேசினார். இதனை தொடர்ந்து தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் அன்பழகன் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். தொடர்ந்து தொழிற்பயிற்சி நிலைய மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உலக குழந்தைகள் மீதான தீங்கிழைத்தலுக்கு எதிரான தின விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி, தொழிற்பயிற்சி நிலையத்தில் இருந்து அரசு தலைமை மருத்துவமணை வரை மனித சங்கிலியாக இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



Tags :
× RELATED பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த...