×

குன்னூர் இந்திரா நகர் பகுதியில் வீடு திடீரென இடிந்து விழுந்தது

குன்னூர், நவ.20:குன்னூரில் தொடர் மழையில் சேதமடைந்த வீடு திடீரென இடிந்து விழுந்ததால் குடியிருப்பு பகுதியில் இருந்த 5 பேர்  அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர். குன்னூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மேக மூட்டத்துடன் மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு வீடுகள் இடிந்து அந்தரத்தில் தொங்கி வருகிறது. மேலும் வீடுகளுக்கு முன்புறம் அடுக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகள் சரிந்து விழுந்துள்ளது. இந்நிலையில் குன்னூர் இந்திரா நகர் பகுதியில் நேற்று மழையால் பாதிக்கப்பட்ட வீட்டின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் கமலா(65), நந்தகுமார்(36), கஸ்தூரி(33), புவனா(10), சுஜீத் (9) ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.  வீடு இடிந்து விழுந்ததால் அங்கிருந்த பொருட்கள் சேதமடைந்தது.

Tags : house ,Indira Nagar ,Coonoor ,
× RELATED வீட்டை உடைத்து கொள்ளை