ஓட்டுநர், இரவு காவலர் பணியிடம் விண்ணப்பிக்க அழைப்பு

ஊட்டி, நவ. 20: நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறையில் காலியாக உள்ள ஓட்டுநர்கள் மற்றும் இரவு காவலர்கள் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம் ஊரக வளர்ச்சி அலகில் காலியாக உள்ள ஜீப் ஓட்டுநர்கள் மற்றும் இரவு காவலர்கள் பணியிடங்களை நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் காலி பணியிடங்கள் விவரங்கள் இன சுழற்சி ஒதுக்கீடு மற்றும் விண்ணப்ப படிவம் ஆகியவை இம்மாவட்டத்தின் www.nilgiris.nic.in என்ற இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பணியிடத்திற்கான விண்ணப்பங்களை இணைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 29ம் தேதி வரை அலுவலக வேலை நேரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வளர்ச்சி அலுவலகத்தில் பெற்று கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED சாலை போக்குவரத்து நிறுவனத்தின் இலவச இலகுரக வாகன ஓட்டுனர் பயிற்சி