×

மூடப்படாத கிணறால் விபத்து அபாயம்

பந்தலூர், நவ. 20: நெலாக்கோட்டை ஊராட்சி பாட்டவயல் கரும்பன் மூலா பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் குடிநீர் வசதி இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இப்பகுதியில் குடிநீர்வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என அப்பகுதி மக்கள் நெலாக்கோட்டை ஊராட்சிக்கு கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், நெலாக்கோட்டை ஊராட்சி கூடலூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் பாட்டவயல் கரும்பன்மூலா பகுதியில் குடிநீர் கிணறு அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து கடந்த சில மாதங்களுக்கு முன் கிணறு தோன்றும்  பணி நடைப்பெற்றது.

சுமார் 60 அடி ஆழம் கிணறு தோண்டப்பட்டு தண்ணீர் இல்லாததால் பணியை பாதியில் நிறுத்தப்பட்டது.   கிணற்றை மூடாமல் வைத்திருப்பதால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் நிலை உள்ளது. வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமுள்ள இப்பகுதியில் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் கிணற்றில் விலங்குகள் விழுந்து பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே பாதுகாப்பற்ற கிணற்றை மூடி நீராதாரம் உள்ள பகுதியில் கிணறு அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : accident ,well ,
× RELATED பொன்னமராவதி குப்பைக் கிடங்கில்...