×

ஓவேலி மக்களின் வாழ்வாதார பிரச்னை

கூடலூரில் டிச.1 முதல் தொடர் உண்ணாவிரதம்
கூடலூர் நவ. 20: கூடலூரில்  ஓவேலி மக்கள் கூட்டமைப்பு சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, அமைப்பாளர் முருகையா தலைமை வகித்தார். செயலாளர் சகாதேவன்,  பொருளாளர் இபினு| உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.  சட்டமன்ற உறுப்பினர்  திராவிடமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். திமுக, காங்கிரஸ்,  சிபிஎம், சிபிஐ, முஸ்லீம் லீக், விசிக , மதிமுக, தேமுதிக, அமமுக, மநேமக,  விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து  கொண்டனர். இதில், ஓவேலிமக்களின் வாழ்வாதார பிரச்னைகளான, பிரிவு 17 மற்றும் பிரிவு 53 நிலங்களில் காலம்காலமாக வசிக்கும் மக்களின் விவசாய நிலங்கள் மற்றும் வீட்டு மனைகளுக்கு பட்டா வழங்க வேண்டும்.  மின் இணைப்பு கிடைக்காத அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்க வேண்டும்.  

 மழையால் சேதமடைந்த வீடுகளின் பராமரிப்பு பணிகளுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல உள்ள தடையை நீக்க வேண்டும்.இப்பகுதியில் சேதமடைந்துள்ள சாலைகள் பாலங்களை சீரமைத்து போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும்.  புதிய வனச் சட்டம் பிரிவு 16ஐ ரத்து செய்ய வேண்டும்.  5 ஏக்கருக்கு கீழ் விவசாய உள்ள நிலங்களுக்கு தனியார் வன பாதுகாப்பு சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து  கூடலூரில் டிசம்பர் 1ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags : Oveley ,
× RELATED 13 பேர் டிஸ்சார்ஜ்