×

அய்யன்கொல்லி பள்ளி மாணவர்கள் மாநில விளையாட்டு போட்டியில் பங்கேற்பு

பந்தலூர், நவ. 20 : ஊட்டியில்  62வது குறுவட்ட அளவில் தடகளப் போட்டி நடந்தது. அதில் அய்யன்கொல்லி புனித தாமஸ் மெட்ரிக் மேநிலைப்பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்று விளையாடினர். குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகளில் மாநில அளவில் நடக்கும் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இன்று திருச்சியில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க உள்ள மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் செர்லி, உடல் கல்வி ஆசிரியர் தர்மகுமார் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி நிர்வாகம் ஆகியோர் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Tags : Ayyankolli ,School Students ,State Sports Competition ,
× RELATED அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக்...