×

தூய்மை விழிப்புணர்வு

பந்தலூர், நவ. 20: நெல்லியாளம் நகராட்சி அலுவலகத்தில் அனைவருக்கும் வீடு திட்டம் பயனாளிகளுக்கு, குப்பைகளை கண்ட இடங்களில் போடக்கூடாது, குப்பைகளை தரம் பிரித்து வழங்கவேண்டும், வீடு மற்றும்  சுற்றுப்புறத்தை  சுகாதாரமாக வைத்திருக்கவேண்டும்,  வீட்டை சுற்றி தண்ணீர் தேங்கவிடாமல் பார்த்து கொள்ளவேண்டும்,  கண்ட இடங்களில் எச்சில் துப்புவது, அசுத்தம் ஏற்படுத்துவதை தவிர்க்கவேண்டும், சுத்தமாக இருந்தால் நோய்வராமல் தடுக்கமுடியும். இதை பயனாளிகள் கடைபிடிக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு நெல்லியாளம் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் பாலகுமார், தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் உதவி பொறியாளர் அகிலா, சுகாதார ஆய்வாளர் சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தூய்மை மற்றும் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


Tags :
× RELATED விழிப்புணர்வு முகாம்