×

கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

ஊட்டி, நவ. 20: சமூக நல்லிணக்கத்திற்காக பாடுபட்டவர்கள் கபீர் புரஸ்கார் விருது 2019க்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சரால் ஆண்டுதோறும் சமூக மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்காக கபீர் புரஸ்கார் விருது வழங்கப்பட்டுவருகிறது. இவ்விருத்திற்கான விண்ணப்பம் ஊட்டியில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம். தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை பெற்று பூர்த்தி செய்து வரும் 25க்குள் ஒப்படைக்க வேண்டும். விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு கலெக்டர் பரிந்துரையுடன் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.


Tags :
× RELATED கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு