ஊராட்சி குழு உறுப்பினர் பதவி திமுக சார்பில் விருப்ப மனு தாக்கல்

ஈரோடு, நவ. 20: மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட இளைஞரணி அமைப்பாளர் பவானிசேகர் விருப்பமனு தாக்கல் செய்தார்.தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக அரசியல் கட்சிகள் தங்களது தொண்டர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்று வருகின்றன. ஈரோடு மாவட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் விருப்ப மனுக்களை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், ஈரோடு மாவட்ட ஊராட்சி குழு 13வது வார்டு உறுப்பினர் (மாவட்ட கவுன்சிலர்) பதவியில் திமுக சார்பில் போட்டியிடுவதற்காக திமுக வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பவானி கே.ஏ.சேகர் தனது விருப்ப மனுவை நேற்று முன்தினம் கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் நல்லசிவத்திடம் தாக்கல் செய்தார். இந்நிகழ்ச்சியில் பவானி ஒன்றிய செயலாளர் துரைராஜ், மாவட்ட பிரதிநிதி வேலுச்சாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>