அறுவை சிகிச்சைக்கு உதவி கேட்டு தொழிலாளி குடும்பத்துடன் மனு

ஈரோடு, நவ. 20:   ஈரோடு அருகே வில்லரசம்பட்டி மஞ்சள் மண்டிக்காரர் தோட்டத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (37), கட்டிட தொழிலாளி. இவருக்கு பட்டுரோஸ் என்ற மனைவியும், ஒரு மகன், இரு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் இரண்டு கிட்னிகளும் பாதிக்கப்பட்ட நிலையில் பாலமுருகன் நேற்று அறுவை சிகிச்சைக்காக உதவி கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். இது குறித்து பாலமுருகன் கூறியதாவது: நான் கட்டிட வேலை செய்து வந்தேன். எனக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டிட வேலை செய்தபோது மயங்கி விழுந்து விட்டேன். இதனை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் எனது இரண்டு கிட்னிகளும் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. கிட்னி அறுவை சிகிச்சை செய்ய ரூ.1.50 லட்சம் செலவாகும் என டாக்டர்கள் கூறுகின்றனர். கிட்னி அறுவை சிகிச்சை செய்ய மாவட்ட நிர்வாகம் எனக்கு உதவி செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

Advertising
Advertising

Related Stories: