×

ஈங்கூரில் 22ம் தேதி மின்தடை

ஈரோடு, நவ. 20: ஈங்கூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் 22ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பெருந்துறை கோட்டத்தை சார்ந்த பெருந்துறை தெற்கு பகுதி, கொங்கு காலேஜ், நந்தா கல்லூரி, மூலக்கரை, வெள்ளோடு, கவுண்டிச்சிபாளையம், ஈங்கூர், பாலப்பாளையம், மு.பிடாரியூர் வடக்கு பகுதி, வேலாயுதம்பாளையம், 1010 நெசவாளர் காலனி, பெருந்துறை ஆர்.எஸ்.பகுதி ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

Tags : Ingur ,
× RELATED பொதிகையில் 15 நிமிட சமஸ்கிருத செய்தி...