குன்னத்தூரில் தென்னங்கருப்பட்டி வரத்து அதிகரிப்பு

அவிநாசி, நவ. 20:  குன்னத்தூரில் ரூ.5 லட்சத்து 64 ஆயிரத்துக்கு கருப்பட்டி ஏலம் நடைபெற்றது.  திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில், கோவை, ஈரோடு மாவட்ட கூட்டுறவு கருப்பட்டி உற்பத்தியாளர் சம்மேளனம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தென்னை மற்றும் பனங்கருப்பட்டியை விவசாயிகள் ஏல முறையில் விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்வது வழக்கம். இதன்படி நேற்று நடந்த ஏலத்தின்போது 4  ஆயிரத்து 10 கிலோ தென்னங்கருப்பட்டி வந்திருந்தன. தென்னங்கருப்பட்டி கிலோ ஒன்றுக்கு ரூ.141 வீதம், ரூ.5 லட்சத்து 64 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.இந்த ஏலத்தில் பனங்கருப்பட்டி வரத்து இல்லை என கூட்டுறவு விற்பனை சம்மேளன மேலாண்மை இயக்குனர் மருதமுத்து, தலைவர் பொன்னுசாமி, துணைத்தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் தெரிவித்தனர்.

Related Stories:

>