×

பவானி ஆற்றில் மூழ்கிய வாலிபரை தேடும் பணி தீவிரம்

சத்தியமங்கலம், நவ.20: சத்தியமங்கலம் பவானி ஆற்றில் மூழ்கிய வாலிபரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் விநாடிக்கு 1100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந் நிலையில், சத்தியமங்கலம் பவானி ஆற்றுப்பாலத்தில் இருந்து சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர், நேற்று மதியம் ஆற்றில் குதித்து நீரில் மூழ்கியதை அப்பகுதி மக்கள் பார்த்து சத்தியமங்கலம் தீயணப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற வீரர்கள், சத்தியமங்கலம் பவானி ஆற்றுப்பாலம், கொமரபாளையம் பவானி ஆற்றுப்படித்துறை மற்றும் சதுமுகை பகுதிகளில் உள்ள பவானி ஆற்றில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆற்றில் தண்ணீர் ஓரளவு வேகமாக செல்வதால் நீரில் மூழ்கிய நபரை தேடும் பணி சிரமம் உள்ளதாக தீயணப்புத்துறையினர் தெரிவித்தனர். தகவலறிந்த சத்தியமங்கலம் போலீசார் பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களிடம் ஆற்றில் குதித்த வாலிபர் குறித்து தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.


Tags : Bhavani River ,
× RELATED ஓடையில் குளித்த வாலிபர் மாயம் தேடும் பணி தீவிரம்