பெருந்துறை, சத்தியில் இன்று மின் குறைதீர் கூட்டம்

ஈரோடு, நவ.20:  பெருந்துறை மின் கோட்டத்திற்கு உட்பட்ட மின் பயனீட்டாளர்கள் மாதாந்திர குறைதீர் கூட்டம் இன்று (20ம் தேதி) பெருந்துறை வெங்கமேட்டில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு மேற்பார்வை பொறியாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், பெருந்துறை, வெள்ளோடு, ஈங்கூர், கொடுமணல், சென்னிமலை, கவுண்டச்சிபாளையம், குன்னத்தூர், விஜயமங்கலம், பிடாரியூர், புதுப்பாளையம் ஆகிய பகுதியை சேர்ந்த மின் பயனீட்டாளர்கள் பங்கேற்கலாம். இதேபோல், சத்தியமங்கலம் அத்தாணி ரோட்டில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் சத்தி பகுதியில் உள்ள மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம் கோபி மேற்பார்வை பொறியாளர் நேரு தலைமையில் இன்று (20ம் தேதி) நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சத்தி பகுதியை சேர்ந்த மின் பயனீட்டாளர்கள் கலந்து கொண்டு மின்சாரம் சார்ந்த பிரச்னைகளை தெரிவித்து பயன்பெறலாம். இத்தகவலை மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>