துப்புரவு தொழிலாளர்களுக்கு தினக்கூலியை உயர்த்தி வழங்க கோரிக்ககை

சத்தியமங்கலம், நவ.20: சத்தியமங்கலம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு தினக்கூலியாக ரூ.230 மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால், துப்புரவுத் தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.இந்நிலையில் ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.சின்னச்சாமி தலைமையில் துப்புரவுத் தொரிலாளர்களுக்கு தினக்கூலியை உயர்த்தி வழங்க கோரி சத்தியமங்கலம் நகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது.

இதில், சத்தி கிளைத்தலைவர் ஸ்டாலின் சிவக்குமார், ஏஐடியுசி  சத்தி ஒன்றியச் செயலாளர் ராஜா, மாணவர் பெருமன்ற மாவட்டச் செயலாளர் சுரேந்திரன், ஏஐடியுசி துப்புரவு உள்ளாட்சித்துறை பணியாளர் சங்கத்தின் சத்தி கிளைச்செயலாளர் காந்தி, பொருளாளர் பத்திரன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகளும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Related Stories:

>