×

தூத்துக்குடி மாவட்டத்தில் கோயில் அறங்காவலர்களை தேர்வு செய்ய குழு நியமனம்

தூத்துக்குடி, நவ.20: தூத்துக்குடி மாவட்டத்தில் கோயில் அறங்காவலர்களை தேர்வு செய்ய குழு நியமனம் செய்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை நிர்வகிப்பதற்காக இந்து சமய அறநிலைக்கொடைகள் சட்டம் 1959, சட்டப்பிரிவு 7ஏ-ன் கீழ் ஒவ்வொரு வருவாய் மாவட்ட எல்கைக்குட்பட்ட சட்டப்பிரிவு 46(iii)ன் கீழ் வகைப்படுத்தப்பட்ட சமய அறநிறுவனங்கள் தவிர மற்ற சமய அறநிறுவனங்களுக்கு பரம்பரை முறை வழிசாரா அறங்காவலர்கள் நியமனம் செய்ய தகுதி வாய்ந்த நபர்களை தெரிவு செய்து பரிந்துரைப்பதற்கு அனைத்து வருவாய் மாவட்டத்திலும் மாவட்ட குழு அரசால் அமைக்கப்பட வேண்டும். இக்குழுவானது கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம் செய்வதற்கு தகுதி உள்ள நபர்கள் அடங்கிய பட்டியல் தயார் செய்து அளிக்க வேண்டும். அதன்படி தூத்துக்குடி உள்பட 15 மாவட்டங்களுக்கு 5 உறுப்பினர்களை கொண்ட மாவட்ட குழு அமைத்து அரசு ஆணையிட்டுள்ளது.  தூத்துக்குடி மாவட்டத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ள மாவட்ட குழு உறுப்பினர்கள் விவரம் வருமாறு: தலைவராக மோகன், உறுப்பினர்களாக ராமச்சந்திரன், தனஞ்செயன், பொன்ராஜ், ஜெயசங்கரி ஆகியோரை அரசு நியமித்துள்ளது.


Tags : Temple Trustees ,Thoothukudi District ,
× RELATED தலித் ஆயர்களை நியமிக்க வலியுறுத்தி பிரசாரம்