×

கோவில்பட்டியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி, நவ. 20:  கோவில்பட்டியில் நாராயணசாமி நாயுடு உழவர் உழைப்பாளர் சங்கம், விவசாயிகள் சங்கம் சார்பில்  இஎஸ்ஐ மருத்துவமனை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சீத்தாராமன் தலைமை  வகித்தார். மகளிர் பாதுகாப்பு குழு தலைவர் சுந்தரி முன்னிலை வகித்தார்.  பகத்சிங் மன்ற மாவட்டத் தலைவர் உத்தண்டராமன் சிறப்புரையாற்றினார். இதில் நரிக்குறவர்  சங்க மாவட்டத் தலைவர் கலியமூர்த்தி, ஆட்டோ தொழிற்சங்க வட்டாரச் செயலாளர்  கொம்பையா, ரத்தினரவேல், சின்னச்சாமி, சங்கரலிங்கம், ஒன்றியக்குழு  உறுப்பினர் சுப்புராஜ், மாவட்ட குழு உறுப்பினர் சீனிராஜ், பொன்ராஜ்,  ரமேஷ்கண்ணா, பூமிபாலன் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Farmers demonstration ,Kovilpatti ,
× RELATED கோவில்பட்டியில் நீர்வரத்து ஓடை...