×

கலெக்டருக்கு மத்திய அரசு விருது

தூத்துக்குடி, நவ. 20: தூய்மை பாரதம் இயக்க திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரிக்கு மத்திய அரசு விருது வழங்கிப் பாராட்டியுள்ளது. மத்திய அரசின் தூய்மை பாரதம் இயக்க திட்டத்தை நிகழாண்டில் சிறப்பாக செயல்படுத்தியதோடு தென்னிந்திய அளவில் தூத்துக்குடி மாவட்டம் 2வது இடத்தை பிடித்தது. இதையெடுத்து, டெல்லியில் பிரவசி பாரதிய கேந்திரா அமைப்பு சார்பில் நேற்று நடந்த விழாவில் கலெக்டர் சந்தீப் நந்தூரிக்கு ஸ்வச் சர்வேகசான் கிராமியன் விருதை மத்திய அமைச்சர் சதானந்த கவுடா வழங்கிப் பாராட்டினார். விழாவில் மத்திய இணை அமைச்சர் ரத்தன்லால் கட்டாரியா, தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Collector ,
× RELATED மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்ட பொதுமக்கள்