×

சர்வதேச கராத்தே போட்டிக்கு விளாத்திகுளம் அம்பாள் பள்ளி மாணவர்கள் தேர்வு

விளாத்திகுளம், நவ. 20: மலேசியாவில் நடைபெறும் சர்வதேச கராத்தே போட்டிக்கு விளாத்திகுளம் அம்பாள் பள்ளி மாணவர்கள் தேர்வுபெற்றுள்ளனர். மலேசியாவில் 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள கேகே சர்வதேச அளவிலான கராத்தே போட்டிக்கு சோபுக்காய் கோஜிரியோ கராத்தே -டூ இந்தியா சார்பி தூத்துக்குடி விளாத்திக்குளம் அம்பாள் பள்ளி மாணவர்கள் அக்சய், சுகேஷ்வர், சுகித், ஹர்சத்ராஜ் தேர்வுபெற்றுள்ளனர். தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்கள் தேசிய மற்றும் மாநில அளவிலான கராத்தே போட்டிகளில் பல்வேறு பதக்கங்கள் வென்றுள்ளனர். தேர்வு பெற்ற மாணவர்களை சோபுக்காய் கோஜிரியோ கராத்தே பள்ளியின் -இந்திய தலைமை பயிற்சியாளரும் தொழில்நுட்ப இயக்குநருமான ரென்சி சுரேஷ்குமார், அம்பாள் பள்ளி நிர்வாகி மார்க்கண்டேயன், செயலாளர் சுப்பா ரெட்டியார், நிர்வாக அலுவலர் நரசிம்மராஜ், முதல்வர் ஜெயகாந்த் மற்றும் தூத்துக்குடி மாவட்ட சோபுகாய் கோஜுரியூ கராத்தே பள்ளி தலைவர் சென்சாய் செந்தில், மாவட்டச் செயலாளர்  சென்சாய் முத்துராஜா உள்ளிட்ட ஏராளமானோர் பாராட்டினர்.


Tags : Valathikulam Ambal School Students ,International Karate Competition ,
× RELATED மலேசியாவில் நடந்த சர்வதேச கராத்தே...