மயங்கி விழுந்த தொழிலாளி பலி

சாத்தான்குளம், நவ. 20:  சாத்தான்குளம் அருகே நடந்துசென்றபோது திடீரென மயங்கி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார். சாத்தான்குளம்  அருகேயுள்ள பூவுடையார்புரத்தைச் சேர்ந்தவர் ஆத்திபாண்டி(55) தொழிலாளி. இவரது  மனைவி மற்றும் குழந்தைகள் தூத்துக்குடியில் வசித்து வருவதால், ஆத்திப்பாண்டி மட்டும் ஊரில் தனியாக வசித்து வந்தார். கடந்த 17ம்தேதி பூவுடையார்புரம் பஸ்  நிலையம் அருகே நடந்து சென்றபோது திடீரென மயங்கி விழுந்த ஆத்திபாண்டியை, அக்கம்பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.  தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் விசாரணை நடத்தி வருகிறார்.


Tags :
× RELATED பாதாள சாக்கடை சுத்தப்படுத்திய...