×

விளையாட்டு போட்டிகளுடன் கடையம் பள்ளியில் குழந்தைகள் தின விழா

கடையம், நவ. 20: கடையம் ஆதர்ஷ் வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் ஐசக் பாக்கியசாமி தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் மாரிச்செல்வி, ஜவகர்லால் நேரு பற்றி பேசினார். தமிழ் ஆசிரியை எமிமா, ஆங்கில ஆசிரியை லோஷனா ஆகியோர் குழந்தைகள் நாட்டின் எதிர்கால தூண்கள் என்ற தலைப்பிலும், ஜவகர்லால் நேரு குழந்தைகளிடையே காட்டிய அன்பை வெளிக்காட்டும் விதமாக அவரது பிறந்த நாளை கொண்டாடுவது பற்றியும் பேசினர்.
உடற்கல்வி ஆசிரியர் வினோத் மாணவர்களுக்கு முறுக்கு கடித்தல், இசைக்கு இடம் பிடித்தல், தடை தாண்டி ஓட்டம், பலூன் உடைத்தல் போன்ற விளையாட்டுகளை நடத்தி மாணவர்களை உற்சாகப்படுத்தி, இனிப்புகளை வழங்கினர்.


Tags : Children's day ceremony ,stall school ,sports competitions ,
× RELATED கொரோனா எதிரொலி: விளையாட்டு போட்டிகள்,...