×

சொக்கம்பட்டி திரிகூடபுரத்தில் விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம், ஒருவருக்கு அரசு வேலை

கடையநல்லூர், நவ. 20: கடையநல்லூர் அடுத்த சொக்கம்பட்டி திரிகூடபுரத்தில் போலீஸ் வாகனம் மோதிய விபத்தில் பலியான 3 பேரின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என முகம்மது அபுபக்கர் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: எனது தொகுதிக்குட்பட்ட திரிகூடபுரம் ஊராட்சியில் கடந்த 9ம் தேதி போலீஸ் வாகனம் மோதிய விபத்தில் பலியான ஆயிஷாள் பீவி, கன்சாள் மஹரிபா, இர்பானா ஆஷியா ஆகியோர் உயிரிழந்தனர். இவர்களது குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து குறைந்தபட்சம் ரூ.20 லட்சம் வழங்க வேண்டும். அக்குடும்பத்தினரில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மேலும் மதுரை- தென்காசி நெடுஞ்சாலைகளில் விபத்து நேராமல் தடுக்க தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குறுகலாகவும், வளைவாகவும் உள்ள சொக்கம்பட்டி- திரிகூடபுரம் சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். திரிகூடபுரத்தில் பாதுகாப்பான நிழற்குடை உருவாக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Tags : victims ,Sokkampatti ,accident ,Thirukkudapuram ,
× RELATED வெள்ளத்தில் தத்தளிப்பவர்களை மீட்க...