×

பயிர்களில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி மாணவிகள் செயல்விளக்கம்

நெல்லை, நவ. 20: கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி மாணவிகள் தங்களது துறை தலைவர்கள் அறிவுறுத்தலின் பேரில் விவசாயிகளை நேரில் சந்தித்து பயிர்களில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த ஆலோசனை மற்றும் செயல்விளக்கம் அளித்து வருகின்றனர். அதன்படி களக்காடு அருகே உள்ள எஸ்என்.பள்ளிவாசல் கிராமத்தில் மஞ்சள் ஒட்டு பொறி குறித்து கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம் அளித்தனர்.எஸ்என் பள்ளிவாசல் கிராமத்தில் மிளகாய், தக்காளி போன்ற காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். அவற்றில் வெள்ளை ஈக்கள், இலைப்பேன் போன்ற பூச்சிகளின் தாக்கத்தால் இலைகள் சுருண்டும், செடிகள் வளர்ச்சி குன்றியும் காணப்பட்டன. இந்த பூச்சிகளின் தாக்கத்தை எளிய முறையில் கட்டுப்படுத்த மஞ்சள் ஒட்டு பொறி பயன்படுத்துவது குறித்த செயல்விளக்கத்தை வேளாண் கல்லூரி மாணவிகள் நடத்தினர். கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி தலைவர் இறைவன் அருட்கனி அய்யாநாதன் மற்றும் சோமசுந்தரம் சுந்தர், செண்பகவல்லி அறிவுரையின் பேரில் மாணவிகள் அபிராமி, ஆன்ஸ் எழிலரசி, இந்து, மகாசந்திரமுகி, பிரியதர்ஷினி, சாருமதி, சவுந்தர்யா ஆகியோர் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.


Tags : College Students ,
× RELATED ஒரே பைக்கில் சென்றபோது அடையாளம்...