×

சாதி சான்றிதழ் தாங்க... தாலுகா அலுவலகம் வந்த பள்ளி மாணவ, மாணவிகள்

தென்காசி, நவ. 19: தென்காசியில் சாதி சான்றிதழ் வழங்க கோரி பள்ளி மாணவ, மாணவிகள் தாலுகா அலுவலகத்தில் மனு அளித்தனர். தென்காசி அடுத்த பாட்டப்பத்து மற்றும் உடையார் தெரு பகுதியில் சுமார் 60 குடும்பங்களுக்கும் மேற்பட்ட புதிரை வண்ணார் சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் நேற்று காலை பள்ளிக்கு செல்லும் தங்களது குழந்தைகளுடன் தாலுகா அலுவலகத்தில் திரண்டனர்.  புதிரை வண்ணார் எழுச்சி பேரவை மாவட்ட செயலாளர் இசைவாணன் தலைமையில் மாவட்ட அமைப்பாளர் ரமேஷ், ஒன்றிய செயலாளர் முருகன், மாவட்ட நிதி செயலாளர் ஆனந்த், செய்தி தொடர்பாளர் இளையராஜா, துணை செயலாளர் செல்வகணேஷ் உள்ளிட்டோருடன் தாலுகா அலுவலகத்தில் சாதி சான்றிதழ் கேட்டு மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: நாங்கள், புதிரை வண்ணார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். எங்களது குழந்தைகளின் கல்விக்காகவும், அரசு நலத்திட்ட உதவுகளை பெறவும், சாதி சான்றிதழ் அத்தியாவசிய தேவையாக உள்ளது. இதுகுறித்து ஏற்கனவே கடந்த 5.8.19ல் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம். தொடர்ச்சியாக தென்காசி தாலுகா அலுவலகத்திலும் வழங்கியுள்ளோம். எனவே உரிய விசாரணை நடத்தி முறையாக சாதி சான்றிதழ் வழங்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.Tags : school student ,
× RELATED 128 மாணவர்களுக்கு கல்வி உதவிதொகை