×

களக்காட்டில் பைக் மோதி பெண் காயம்

களக்காடு, நவ. 20: களக்காடு ஜவகர் வீதியை சேர்ந்தவர் குப்புசாமி (67). இவர், திருப்பூரில் கூலி தொழிலாளியாக உள்ளார். சம்பவத்தன்று ஊருக்கு வந்திருந்த குப்புசாமி, தனது மனைவி முப்பிடாதியுடன் (60) களக்காடு தபால் நிலையத்தில் இருந்து புதிய பஸ் ஸ்டாண்ட் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் கக்கன்நகரை சேர்ந்த நைனார் மகன் முருகன் என்பவர் ஓட்டி வந்த பைக் முப்பிடாதி மீது மோதியது. இதில் அவருக்கு இடது கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் களக்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து குப்புசாமி களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : bike collision ,Kalakkad ,
× RELATED களக்காட்டில் வாலிபரின் வீட்டில் ரூ.20 ஆயிரம் திருட்டு