×

போர்வெல் போட அனுமதி மறுப்பதாக கூறி பிடிஓ அலுவலகம் முன் லாரி உரிமையாளர் தீக்குளிக்க முயற்சி தண்டராம்பட்டில் பரபரப்பு

தண்டராம்பட்டு, நவ. 20: போர்ெவல் போட அனுமதி மறுப்பதாக கூறி லாரி உரிமையாளர் தண்டராம்பட்டு பிடிஓ அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட கீழ்ராவ்வந்தவாடி பகுதியைச் சேர்ந்த ராபர்ட்(37). போர்வெல் லாரி வைத்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை கிராமத்தில் ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை விழுந்தது அடுத்து தமிழகம் முழுவதும் அனுமதியின்றி போர் போடக்கூடாது என்றும், அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற்று போர் போட்டுக் கொள்ளலாம் என அரசு அறிவித்தது.இந்நியைில் ராபர்ட் நேற்று மாலை தண்டராம்பட்டு பிடிஓ கிருஷ்ணமூர்த்தி அலுவலகத்திற்கு வந்தார். திடீரென தன் கையில் வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து தன் தலையில் ஊற்றிக் கொண்டு, என் சாவுக்கு காரணம் பிடிஓ தான் என்று கத்தினார். பின் தனது உடலில் தீ வைக்க முயன்ற போது அருகில் இருந்தவர்கள் ஓடி சென்று அவர் மீது தண்ணியை ஊற்றி காப்பாற்றினர். இதனால் சற்று நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து வந்த தண்டராம்பட்டு போலீசார் ராபர்ட்டை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றனர். போலீசார் விசாரணையில் தான் போர்வெல் போட அனுமதி கேட்டும் அந்த கடிதத்தை பிடிஓ கிழித்து போட்டு விடுகிறார். எனக்கு எந்த அனுமதியும் கொடுப்பது கிடையாது. இதனால் எனது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.இதுகுறித்து பிடிஓ கூறுைகயில், `ராபர்ட் போர் போடுவதற்காக என்னிடம் எந்த அனுமதி கேட்டும் ஒரு கடிதமும் கொடுக்கவில்லை' என்றார்.

Tags : lorry owner ,PDO ,office ,
× RELATED வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே...