×

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி சேலை தாலுகா அலுவலகங்களுக்கு சப்ளை

வேலூர், நவ.20:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக இலவச வேட்டி சேலை தாலுகா அலுவலகங்களுக்கு சப்ளை செய்யப்பட்டு வருகிறது.தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு தமிழக அரசின் இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி பொங்கல் பண்டிகை வருவதையொட்டி ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்க தமிழகம் முழுவதும் முழுவீச்சில் பணிகள் நடந்து வருகிறது.இதற்காக வேலூர் மாவட்டத்தில் 13 தாலுகாக்களுக்கு கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் இருந்து இலவச வேட்டி சேலை சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர்கள் கூறியதாவது:

வேலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு சேலையும், வேட்டியும் வழங்கப்படுகிறது. இதற்கான வேட்டி, சேலைகள் கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் இருந்து அந்தந்த தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.அங்கிருந்து பிரித்து அந்தந்த விஏஓ அலுவலகத்துக்கு அனுப்பும் பணியில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட உள்ளனர்.குறிப்பாக வேலூர் தாலுகா அலுவலகத்திற்கு நேற்று கோஆப்டெக்ஸ் நிறுவனத்தில் இருந்து நேற்று லாரி மூலம் கொண்டு வரப்பட்டு இறக்கி வைக்கப்பட்டுள்ளது. பொங்கலுக்கு முன்பாகவே விஏஓ அலுவலகத்தில் வேட்டி, சேலைகளை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : ration card holders ,taluka offices ,festival ,Vetti Salei ,Pongal ,
× RELATED கிராமங்களுக்கே செல்லாத கிராம...