×

தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் கணினி ஆசிரியர்களை பொதுத்தேர்வு பணிகளில் ஈடுபடுத்த முடிவு

வேலூர், நவ.20:தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் கணினி ஆசிரியர்களை பொதுத்தேர்வு பணிகளில் ஈடுபடுத்திக் கொள்ள பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.தமிழகம் முழுவதும் வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் 10, பிளஸ்1, பிளஸ்2 பொதுத்தேர்வு நடக்கிறது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. தேர்வுக்கான மாணவர் விவரங்களை திரட்டுதல், தேர்வு மையங்கள் அமைத்தல், வினாத்தாள் தயாரிப்பு, தேர்வுக்கான வெற்று விடைத்தாள் அச்சடித்தல், பார்கோடு உருவாக்குவது போன்ற பணிகள் நடந்து வருகின்றன.இப்பணிகளில் அரசு தேர்வுத்துறை பணியாளர்கள் மட்டுமே ஈடுபடுவது வழக்கம். ஆனால், அரசு தேர்வுகள் துறை பணியாளர்கள் தரப்பில் ஆட்கள் பற்றாக்குறை உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, பொதுத்தேர்வுக்கான ஆயத்தப்பணிகளில் பள்ளிக்கல்வித்துறையை சார்ந்தவர்களையும் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டு, தேர்வு பணிகள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, 32 மாவட்டங்களுக்கும் கணினி ஆசிரியர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்களின் விவரங்களை திரட்டவும், அவற்றை கணினியில் பதிவேற்றம் செய்யவும் கணினி ஆசிரியர்கள் பணிக்கப்பட்டுள்ளனர். இப்பணியில் மொத்தம் 64 கணினி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர தேர்வு சம்பந்தப்பட்ட பிற பணிகளுக்கும் ஆசிரியர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்க தேர்வுத்துறை முடிவு செய்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : computer teachers ,Tamil Nadu ,schools ,
× RELATED தமிழகத்தின் பண்பாட்டினை விளக்க...