தற்கொலைகளை தடுக்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருவெறும்பூர், நவ.19: கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் தற்கொலை சம்பவங்களை கண்டித்தும் அந்த வழக்கை நியாயமாக நடத்தக்கோரி பாரதிதாசன் பல்கலை கழக மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்கு முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அண்மை காலத்தில் கல்வி நிறுவனங்களில் தற்கொலைகள் நடந்து வருவது தொடர் கதையாகி உள்ளது. இதனை தடுக்க கோரியும், சென்னை ஐஐடி மாணவி பாத்திமாலத்தீப் கொலை வழக்கை நியாயமாக நடத்த கோரியும் திருச்சி பாரதிதாசன் பல்கலை கழக மாணவ, மாணவிகள் சார்பில் கல்லூரி வளாகத்திற்கு முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஆராய்ச்சி பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு மாணவன் அஜித்தன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.ஆபத்தை உணராமல் தண்டவாளத்தை கடந்து செல்லும் மாணவ, மாணவிகள்மாற்றுவழி ஏற்பாடுத்தலாமே குகை வழிப்பாதை அமைப்பதற்கு பதிலாக திருவானைக்காவலில் இருந்து சத்திரம் பஸ் நிலையம் செல்லும் வழியில் புதிதாக கட்டிய பாலத்தில் கல்லணை செல்வதற்காக வழி ஏற்படுத்தி கொடுத்துள்ளது போல் மேலவாளாடியிலும் பாலத்தை இணைப்பது போல் பில்லர் எழுப்பி பாலம் அமைத்து கொடுத்தால் பொதுமக்கள் எந்தவித சிரமம் இன்றி சென்று வருவார்கள்.

Related Stories:

>