திருவெறும்பூரில் மணல் கடத்தி சென்ற லாரி பறிமுதல், 2 பேர் கைது

திருவெறும்பூர், நவ.19:  தஞ்சை கொள்ளிடம் பகுதியில் இருந்து கன்னியாகுமரிக்கு நேற்று காலை திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக லாரியில் மணல் கடத்தப்பட்டது. லாரி திருவெறும்பூர் கடைவீதி வழியாக வந்தபோது அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் அந்த லாரியை மறித்து விசாரணை செய்தனர். அப்போது டிரைவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசினார். இதனைத் தொடர்ந்து லாரியை சோதனையிட்டபோது அதில் திருட்டு மணல் இருப்பது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் அவர்களை கைது செய்து விசாரணை செய்தபோது லாரி டிரைவர் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியை சேர்ந்த தங்கமணி மகன் சுனில்குமார் (31), கன்னியாகுமரி சாகர் கட்குளம் பகுதியை சேர்ந்த ரமேஷ் (38) என்பது தெரிய வந்தது. மேலும் அவர்களிடம் விசாரனை செய்ததில் மணல் கடத்துவதற்கும், அதை கன்னியாகுமரிக்கு கொண்டு செல்வதற்கும் திட்டம் போட்டு கொடுத்தவர் பட்டுக்கோட்டையை சேர்ந்த சிபு எனக் கூறியுள்ளனர். அதன் அடிப்படையில் சிபுவை திருவெறும்பூர் போலீசார் தேடி வருகின்றனர்.திட்டம் போட்டு கொடுத்தவருக்கு வலை 605 மனுக்கள் குவிந்தன திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. டிஆர்ஓ சாந்தி தலைமை வகித்து மனுக்களை பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கைக்கு பரிந்துரைத்தார். மொத்தம் 605 மனுக்கள் பெறப்பட்டன. சமூகப்பாகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் பழனிதேவி மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

Related Stories:

>