மாணவிகள் தர்ணா விடுமுறை அறிவித்து நிர்வாகம் உத்தரவு

திருச்சி, நவ. 19: திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி விடுதியில் தங்கிபடித்த வெளிமாநிலத்தை சேர்ந்த மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டித்து நேற்று கல்லூரி மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் கல்லூரிக்கு விடுமுறை அறிவித்து நிர்வாகம் உத்தரவிட்டது. திருச்சியில் கே.கே.நகர் அடுத்துள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த ெஜப்ராபர்வீன் (18) என்ற மாணவி உணவியல் துறை பிரிவில் முதலாமாண்டு படித்து வந்தார். கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி கடந்த 12ம் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கே.கே.நகர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பர்வீன் பள்ளி படிப்பை அவரது மாநிலத்தில் இந்தி மொழியில் படித்துள்ளார். ஆனால் இங்கு ஆங்கில வழியில் பாடம் நடத்தப்பட்டது. இதனால் அவர் படிப்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் மிகவும் கஷ்டப்பட்டு வந்தார். தனக்கு ஆங்கிலம் புரியவில்லை என சகதோழிகளிடம் கூறியுள்ளார். இந்நிலையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து ெகாண்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் ஜெப்ராபர்வீன் தற்கொலைக்கு காரணம் கல்லூரி நிர்வாகம் செய்த டார்ச்சர் தான் என கூறி முதலாமாண்டு மற்றும் 2ம் ஆண்டு மாணவிகள் 50க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு நேற்று கல்லூரி வளாகத்தில் கோஷமிட்டு தர்ணா போராட்டம் நடத்தினர். இதுகுறித்து அறிந்த கே.கே.நகர் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையில் கல்லூரிக்கு விடுமுறை அறிவித்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது. இதையடுத்து மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories: